
கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய புரட்சி ஏற்படுத்தியது என்று சொன்னால் அது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தான். கடந்த 2008 ஆம் வருடம் முதலே ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூலமாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு பொருளாதார ரீதியாக இது நல்ல வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த சூழலில் தான் ஐபிஎல் தொடரின் தரம் குறித்து பல வெளிநாட்டு வீரர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆடம் கில்கிரிஸ்ட் , இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனிடம் பேசினார். அப்போது மைக்கேல் வாகன் யார் சிறந்த கேப்டன்? நீங்களா ? கம்மின்ஸா? என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த கில் கிறிஸ்ட், உலகக் கோப்பையை வெல்வதைவிட ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வது தான் கடினம் என்று கூறியுள்ளார்.