
தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதிலும் பட்டம் விட பயன்படும் மாஞ்சா நாளை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை செய்துள்ளது. சில இடங்களில் பட்டம் வெட்டும் போட்டி நடைபெறும் போது தடையை மீறி இந்த மாஞ்சா நூலை பயன்படுத்துவதால் பலர் காயமடைவதாகவும் சில சமயங்களில் உயிரிழப்புகளை ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தமிழக அரசு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.