விவசாயிகளுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நடைபாண்டுக்கான உர மானியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக 24,420 கோடி ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி நைட்ரஜன் உரம் கிலோ ஒன்றுக்கு ரூ.47.02, பாஸ்பேட் உரம் கிலோ ஒன்றுக்கு ரூ.28.72, பொட்டாசியம் உரம் கிலோ ஒன்றுக்கு ரூ.2.38, சல்பர் உரம் கிலோ ஒன்றுக்கு ரூ.1.89 மானியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை தொடரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.