இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனமிடையே 13 வது நாளாக உச்சகட்ட போர் நடந்து வரும் நிலையில் இந்த போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. காசாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை தற்போது நடத்தி வருகின்றது.

இந்த நிலையில் காசாவில் 10 லட்சம் குழந்தைகளின் உயிர்கள் உத்திரவாதம் இன்று இருப்பதாக SAVE THE CHILDREN அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் உரிய சிகிச்சைகள் கிடைக்காததால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மரணம் அடைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதேசமயம் ஐம்பதாயிரம் கர்ப்பிணிகள் போதிய மருத்துவ உதவிகள் இல்லாமல் தவித்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.