நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த மமிசமான சம்பவம் ஒன்று, அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த 50 வயதான கட்டிடத் தொழிலாளி ஒருவர், கடந்த 20 ஆண்டுகளாக தனது மனைவி, இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் ஆகியோருடன் ஊட்டியில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி (45) அங்குள்ள காட்டேஜ் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இவர்களுடைய 17 வயது மூத்த மகள், தனது இளைய தங்கை மனநல பாதிப்பால் பாதிக்கப்பட்டிருப்பதால், தனது கல்வியை முற்றிலும் கைவிட்டு வீட்டிலேயே தங்கியிருந்து தங்கை பராமரிப்பில் ஈடுபட்டு வருகிறாள்.

இந்த சூழ்நிலையில், உடல்நலக்குறைவால் சில நாட்களாக மனைவி தாம்பத்தியம் மறுத்ததால், அந்த தொழிலாளி தன் சொந்த மகளிடமே “உன் அம்மாவுக்கு இப்போது வயதாகி விட்டது, எனவே நீ என் தேவையை பூர்த்தி செய்” என கூறி, பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார்.

இந்த சம்பவம் கேட்டதும் அதிர்ச்சியில் மூழ்கிய சிறுமி அழுதுள்ளார். தாயிடம்  இது பற்றி கூறியதும், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தன் மகளுடன் ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.