தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவர் முதல் முறையாக கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா புஷ்பா 2, சிக்கந்தர், குபேரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தற்போது புகழின் உச்சத்தில் இருக்கும் நிலையில் சிறுவயது முதல் மிகவும் கஷ்டத்தை அனுபவித்துள்ளார். இதை அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார். இவர் சமீபத்தில் தன்னை பார்ப்பதற்கு ஒரு நடிகை போல் இல்லை என்று கூறி 20 முதல் 25 ஆடிஷன்களில் நிராகரித்ததாக கூறியிருந்தார். ஆனால் தற்போது இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் ஒருவராக திகழ்கிறார். மேலும் முன்னொரு காலத்தில் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் ரஜினிகாந்த் போன்றவர்கள் கூட பல நிராகரிப்புகளை சந்தித்துதான் சினிமாவில் உச்சம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.