
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிகர் தனுஷ் மீது பகிரங்க குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது. அதாவது நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் நாளை நெட்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில் நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற 3 வினாடிகள் காட்சியை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது நயன்தாராவுக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் நடிகர் தனுஷ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதாவது மற்றவர்களின் வளர்ச்சியை பார்த்து தனுஷால் பொறுக்க முடியவில்லை எனவும் நானும் ரவுடிதான் படத்தில் என்னுடைய நடிப்பை அவருக்கு பிடிக்கவில்லை என்று கூறியதாகவும் கடந்த காலங்களில் தன்னுடன் பயணித்தவர்கள் தற்போது முன்னேற்றம் அடைந்தால் அந்த வளர்ச்சியை பார்த்து சந்தோஷப்படுங்கள் என்றும் கூறினார்.
அதோடு சரமாரியாக நடிகர் தனுஷை விமர்சித்து 3 பக்க அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் எதிர்நீச்சல் என்ற திரைப்படம் வெளிவந்தது. அந்த திரைப்படத்தில் தனுஷ் மற்றும் நயன்தாரா ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார்கள். இந்தப் பாடலில் நடனம் ஆடியதற்காக நயன்தாரா சம்பளம் வாங்கவில்லையாம். இதனை தனுஷ் கூட ஒரு பேட்டியில் கூறியிருப்பார். மேலும் தனுசுக்காக நடிகை நயன்தாரா சம்பளம் வாங்காமல் படத்தின் நடித்துக் கொடுத்த நிலையில் தற்போது ஒரு படத்தில் இடம்பெற்ற 3 வினாடி காட்சிக்காக 10 கோடி கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று நயன்தாரா ஆதங்கப்படுகிறார். நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.