உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பொருளாதாரம் சரிவடைய தொடங்கியது. அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை அந்தந்த அரசுகள் மேற்கொண்டு இருக்கிறது. கடந்த வருடம் திடீரென்று உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது வளர்ச்சியடைந்த நாடுகளையும் பாதிப்பிற்குள்ளாக்கிவிட்டது. இருப்பினும் போரை ஊக்கப்படுத்தும் வேலைகளிலும் சில நாடுகள் இறங்கி இருக்கிறது.

இந்நிலையில் உலக புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணவீக்க விகிதங்கள், அவற்றின் சகிக்கும் திறனை காட்டிலும் அதிகரித்து இருக்கிறது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உணவு பணவீக்கம் பல்வேறு நாடுகளுக்கும் கவலை தரும் விதமாக இருந்தபோதும், அதை குறைப்பதற்கான மேலாண்மை பணியை இந்தியா திறம்பட மேற்கொண்டது என்று உலக புள்ளியியல் அறிக்கை தெரிவிக்கிறது.