
இந்திய ரிசர்வ் வங்கியானது பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பயனாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உருவாக்கிய பண பரிமாற்ற ஆப்தான் BHIM. இந்த புதிய டைம் லிமிடெட் ஆஃப் குறித்து தற்போது கேஷ்பேக் ஆபர் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சில பயன்பாடுகளுக்கு இந்த கேஷ் பேக் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் ஆப்பை வெர்ஷன் 3.7 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷனுக்கு அப்டேட் செய்தால் மட்டும் தான் இந்த வசதி கிடைக்கும் .
அதாவது உணவு மற்றும் பயணம் தொடர்பான கட்டணங்களுக்கு 100க்கு மேல் பண பரிமாற்றம் செய்தால் பிளாட் கேஷ் பேக் கிடைக்கும் என்று கூறியுள்ளது. அதேபோல பெட்ரோல், டீசல், சிஎன்சிஜி உட்பட அனைத்து எரிபொருள் கட்டணங்களுக்கும் ஒரு சதவீதம் கேஷ் பேக் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.பீம் ஆப் உடன் இணைக்கப்பட்ட இணைக்கப்பட்ட ரூபே கிரெடிட் கார்டை வைத்திருந்தால் 100க்கும் மேல் செய்த மூன்று பரிவர்த்தனைகளுக்கு 100 ரூபாய் பிளாட் கேஷ் பேக் கிடைக்கும்.