
பீகார் மாநிலத்தில் அரசு பொறியியல் கல்லூரி கேண்டினில் சமைக்கப்பட்ட உணவில் குட்டி பாம்பு ஒன்று சேர்த்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த உணவை சாப்பிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேண்டினில் உணவு சரியில்லை என்று கடந்த காலங்களில் பலமுறை புகார் அளித்தும் கல்லூரி நிர்வாகம் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே விட்டு விட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மெஸ் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மெஸ்ஸில் உணவு சாப்பிட்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.