
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஞ்சுமிட்டாய் தடை செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் பானிபூரி விவகாரம் தொடங்கியதால் பல இடங்களில் சோதனை நடைபெற்றது. இது தொடர்பாக பொது மக்களுக்கு உணவு பாதுகாப்பு துறை பல அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.
இந்த நிலையில் உணவின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு துறையிடம் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கெட்டுப் போன இறைச்சி உணவுகளை விற்பது மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நிறமிகளை சேர்ப்பது என உணவகங்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் https://foodsafety.tn.gov.in/register என்ற இணையதளம் மூலம் மக்கள் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.