மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு என்பது பெரும் கலவரமாக மாறிய நிலையில் கடந்த ஒரு வருடமாகவே பதற்றம் நிலவி  வருகிறது. ஏற்கனவே மணிப்பூரில் இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவங்கள் அரங்கேறி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் சமீப  காலமாக மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திய நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வன்முறைகள், பாலியல் பலாத்காரம் என 240 பேர் கொல்லப்பட்ட நிலையில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மெய்தேய் மற்றும் குக்கி இன கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் முதல் ஆயுதம் ஏந்தி வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஜிர்பாம் மாவட்டத்தில் உள்ள வீடுகளில் தீ வைத்தல் பொதுமக்கள் மீது தாக்குதல் என கொடூர சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் நிலைமையை சமாளிக்க முடியாமல் பாதுகாப்பு படை திணறுவதால் சுமார் 2000 மத்திய ஆயுத காவல் படையினரை அங்கு அனுப்பி வைக்க மத்திய அரசு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை அதே பகுதியில் இரு முதியவர்கள் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் காணாமல் போனதோடு மார் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கடந்த 7 ஆம் தேதி கிளர்ச்சியாளர்கள் புகுந்த வீடுகளுக்கு தீ வைத்தனர்.

இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து அன்றைய தினம் இரவு ஜெசாங்கிம் (31) என்பவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில் இவரை வீட்டிற்குள் புகுந்த கிளர்ச்சியாளர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததோடு உயிரோடு தீ வைத்து எரித்துக் கொலை செய்ததாக அவருடைய கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இதற்கிடையில் தற்போது ஆசிரியையின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி அதிர வைத்துள்ளது. அந்த ஆசிரியை உடம்பில் 99 சதவீதம் தீக்காயங்கள் இருந்ததோடு எலும்புகள் உடைந்த நிலையிலும் சேதம் அடைந்த நிலையிலும் காணப்பட்டது.

அவருடைய மண்டை ஓடு எரிந்தது மட்டுமின்றி கடுமையாக உடைந்தும் நொறுங்கியும் தனியாகவும் காணப்பட்டது. அவருடைய தொடைகளில் 5 சென்டிமீட்டர் அளவுக்கு ஆணி அடிக்கப்பட்டுள்ளது. அவருடைய உடல் பாகங்கள் எரிந்ததோடு சில உடல் பாகங்கள் காணாததால் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.