
டெல்லி உயர்நீதிமன்றம் உடல் ரீதியான தொடுதல் பாலியல் வன்கொடுமை ஆகாது என்று கூறி போக்சோ குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு 14 வயது சிறுமியின் தாயார் ஒருவர் தன் மகளை ஒருவர் கடத்தி சென்று விட்டதாக கூறி புகார் கொடுத்தார். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பரிதாபத் பகுதியில் இருந்து சிறுமியையும் அந்த வாலிபரையும் காவல்துறையினர் மீட்டனர். அந்த சிறுமியை வன்கொடுமை செய்ததாக கூறி அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த சிறுமி அவர் தன்னுடைய காதலன் என்றும் தங்களுக்குள் உடல் ரீதியான தொடுதலோ அல்லது பாலியல் ரீதியான உறவோ இல்லை என்று கூறினார்.
அந்த 22 வயது வாலிபருடன் தான் விருப்பப்பட்டு சென்றதாகவும் ஒரே அறையில் ஒன்றாக தங்கி இருந்ததாகவும் சிறுமி கூறிய நிலையில் உடல் ரீதியான தொடுதல் மட்டுமே இருந்ததாக அந்த சிறுமி கூறினார். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கிய நிலையில் இதை எதிர்த்து அந்த வாலிபர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மேலும் அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வெறும் உடல் ரீதியான தொடுதல் வன்கொடுமையாகாது என்று கூறி அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.