தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைப்பதற்கு தாட்கோ மூலமாக கடன் வழங்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ள நபர்கள் தங்களின் சொந்த இடத்தில் அல்லது வாடகை அடிப்படையில் இடங்களை தேர்வு செய்து அமைக்கலாம். தகுதி உடையவர்களுக்கு இந்த மையம் அமைத்துக் கொடுப்பது மட்டுமல்லாமல் அதனை நடத்துபவர்களுக்கு அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.
அந்த கட்டணத்திலும் விலக்கு அளிக்கப்படும். பட்டப்படிப்பு முடித்த 18 முதல் 40 வயதிற்கு உட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களாக இதற்கான கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 6 லட்சம் திட்ட தொகையை நிர்ணயித்து அதற்குரிய மானியமாக 35 சதவீதம் அல்லது அதிகபட்சம் 2.10 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இந்த கடன் பெறுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றிதழ்களுடன் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.