தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சாய் பல்லவி. இவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் நிலையில் தற்போது பாலிவுட்டில் உருவாகும் ராமாயணம் படத்தில் ரன்பீர் கபூர் ராமராக நடிக்கும் நிலையில் சாய் பல்லவி சீதையாக நடித்து வருகிறார். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற 31ஆம் தேதி ரிலீசாகும் நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சாய் பல்லவி சொன்ன விஷயம் வைரலாகி வருகிறது.

இது குறித்து அவர் கூறியதாவது, பிரேமம் படத்தில் நடிப்பதற்கு முன்பாக நான் வெளிநாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவர்ச்சி ‌உடையில் நடனம் ஆடினேன். அந்த நடனத்திற்கு கவர்ச்சியாக ஆடினால் சரியாக ‌ இருக்கும் என்று நான் நினைத்த நிலையில் அந்த வீடியோவை வைரலாக்கி மிகவும் மோசமான கருத்துக்களை தெரிவித்தனர். அதன் பிறகு தான் இனி அதுபோன்ற உடைகள் அணிந்து நடிக்கக்கூடாது என்ற முடிவு செய்தேன். உடம்பை காட்டி நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. குடும்ப பாங்கான தோற்றத்தில் நடிப்பதால் தான் ரசிகர்கள் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். மேலும் என்னுடைய நடிப்பு திறமையை நம்பி வாய்ப்பு கொடுப்பவர்களின் படங்களில் நடித்துவிட்டு போகிறேன் என்று கூறினார்.