கர்நாடக மாநிலம் கலபுரகியில் கொலை செய்வது போல இருவர் ரீல்ஸ் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹும்நாபாத் ரிங் ரோட்டில் திங்கள்கிழமை இரவு, சைபன்னா மற்றும் சச்சின் ஆகிய இருவரும் இரத்தம் போல காணப்படும் சிவப்பு திரவத்தை பயன்படுத்தி, ஒரு கொலை காட்சியை படம்பிடித்தனர். இதில், சைபன்னா, சச்சினின் மேல் அமர்ந்து, அவரை  கொலை செய்வது போல் நடித்தார். இருவரின் முகத்திலும் சிவப்பு திரவம் பூசப்பட்டிருந்ததால், இதைப் பார்த்த பொதுமக்கள் உண்மையில் ஒரு கொலை நடந்துவிட்டதாக நினைத்து அதிர்ச்சியடைந்தனர்.

இந்த காட்சியால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், கலபுரகி சப்அர்பன் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் விசாரணை நடத்திய போது இருவரும் ரீல்ஸ் வீடியோ எடுத்தது உறுதியானது.  இந்த நிலையில் பொதுமக்களிடையே குழப்பம் மற்றும் பயத்தை ஏற்படுத்தியதற்காக, இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.