
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தியாவின் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12 எல் மற்றும் 13 பதிப்புகளில் பிழைகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம், முக்கியமான தகவல்களை திருட வாய்ப்பு உள்ளதாக சைபர் கிரைம் குற்றவாளிகள் எச்சரித்துள்ளனர். மேலும், தேவையில்லாத மெயில்களை திறக்க கூடாது. அங்கீகரிக்கப்பட்ட செயலி தரவுகளில் மட்டுமே தேவையான செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். முக்கியமான தகவல்களை லாக் செய்து வைப்பது நல்லது.