
உஜ்வாலா திட்டத்தில் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்க 1,650 கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தில் மானிய முறையில் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 75 லட்சம் நினைவுகள் வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.