
தர்மசாலா HPCA மைதானத்தில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி, பாதுகாப்பு காரணங்களால் திடீரென ரத்து செய்யப்பட்டது. போட்டி தொடக்கத்தில் பஞ்சாப் அணி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், மைதான விளக்குகள் திடீரென அணைய தொடங்கின.
மின்னணு கோளாறு என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் பாகிஸ்தானின் தாக்குதல்களை அடுத்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் அதிகரித்த பாதுகாப்பு பதற்றம் தான் காரணம் என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அதன் பிறகு சிறப்பு ரயில் மூலம் கிரிக்கெட் வீரர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்த நிலையில் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது, இந்தியா பாகிஸ்தான் இடையே முதல் அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் நிலைமை மாறுகிறது. தற்போதைய சூழ்நிலையை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். ஐபிஎல் தொடரை தொடர்ந்து நடத்துவது குறித்து இன்று முக்கிய முடிவினை எடுக்க உள்ளோம். கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு தான் எங்களுக்கு மிகவும் முக்கியம் என கூறியுள்ளார்.