ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் வடகறத வீதியைச் சேர்ந்தவர் தேசிங்கு. இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி டெய்சி. இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுடைய லெமூரியா என்ற பெண் குழந்தை இருந்தது.

நேற்று பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான வடிவேல் மகன் சஞ்சய் குழந்தையுடன் விளையாடியுள்ளார். அப்போது சஞ்சய் குழந்தையை ஒரு வீட்டின் பின்புறம் இருக்கும் நகராட்சி கட்டண கழிப்பறை கட்டப்படும் இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு துணி துவைக்கும் கல்லில் குழந்தையை படுக்க வைத்து கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சஞ்சயை கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. ஏற்கனவே சஞ்சய் மீது சில வழக்குகள் உள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.