
ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் நடந்த கோர சம்பவம் அனைவரையும் பதறவைத்துள்ளது. 16 வயது மாணவி, 11 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், விக்னேஷ் என்பவர் மாணவியை காதலித்தார். விக்னேஷுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடந்ததால் மாணவி காதலை முறித்து கொண்டார். ஆனால் விக்னேஷ் மாணவிக்கு தொடர்ந்து தொந்தரவு அளித்துள்ளார்.
விக்னேஷ், மாணவியை தனியாக சந்திக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியதாக தெரியவந்துள்ளது. இதனால் மாணவி, விக்னேஷ் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கிடையில் தகராறு ஏற்பட்டு, விக்னேஷ் மாணவியை தாக்கியதோடு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீக்காயங்களால் மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.