
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிகோடா கிராமத்தில் நரேந்திர சதார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரீனா என்ற மனைவியும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்நிலையில் நரேந்திர சதார் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவர்களின் உடல் இன்று ரயில்வே தண்டவாளத்தின் அருகே மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் 4 பேரின் சடலத்தையும் காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ரீனாவின் தந்தை தன் மகள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன் மாமியாருக்கும் தனக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறினார். ஆனால் அப்போது நாங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.