திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த விவேக் (29) என்பவர், திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபதி நகரில் உள்ள ஒரு பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அங்கு பணிபுரிந்து வந்த 23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நண்பர்களாக இருந்து பின்னர் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து பல இடங்களில் தனிமையில் நேரம் செலவிட்ட இருவரிடையே ஏற்பட்ட தொடர்பில், அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை அவர் காதலனிடம் தெரிவித்தபோது, “நாம் திருமணம் செய்து கொள்ளலாம், முதலில் ஊருக்குச் சென்று பெற்றோரிடம் சம்மதம் வாங்கி வருகிறேன்,” என கூறிவிட்டு தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.

ஆனால், பல நாட்கள் கழித்தும் அவர் திரும்பவில்லை. தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றபோதும், எதுவும் பதிலளிக்கவில்லை. சந்தேகமடைந்த பெண் விசாரித்தபோது, விவேக் பெற்றோர் பார்த்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பதும், தற்போது குடும்பத்துடன் வாழ்வதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விவேக் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.