வாட்ஸ் அப்- ஐ உலக அளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களுடைய வசதிக்காக whatsapp நிறுவனம் அவ்வப்போது புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தகவல் பரிமாற்ற செயலியாக தொடங்கிய whatsapp பல்வேறு வகையான டிஜிட்டல் சேவைகளையும் வழங்கி வருகிறது.  இதற்கிடையில் அவ்வப்போது Whatsapp வாடிக்கையாளர்களுடைய கணக்கு ஹேக்கர்கள் மூலமாக ஹேக் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனால் வாட்ஸ் அப்பை யாராவது ஹேக் செய்தால் அது எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதாவது வாட்ஸ் அப்பில் எண்ட்-டு -எண்ட் என்கிரிப்சன் செயல்முறைகள், இரண்டு காரணி அங்கிகாரம் இருந்தாலும் ஏதேனும் ஒரு முறையால் ஹேக்கர்கள் ஹேக் செய்து விடுகிறார்கள். மேலும் தெரியாதவ நபர்களிடம் இருந்து வரும் மெசேஜை நாம் படிக்க விட்டாலும் அதை படித்தது போல நீல நிற டிக் தோன்றும் இப்படி இருந்தாலும் ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.  மேலும்  ப்ரோபைல் பிக்சர், BIO மற்றும் பெயர் போன்ற விவரங்களை மாற்றப்பட்டிருந்தால் உங்களுடைய கணக்கை ஆள்மாறாட்டம் செய்துள்ளார்கள் என்று அர்த்தம். இது போன்ற மாற்றங்கள் ஏதேனும் நடந்தால் உடனடியாக வாட்ஸ் அப் கணக்கை UNinstal செய்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டும். மேலும் வாட்ஸ் அப்பின் சுய விவரங்களை தெரியாத நபர்களுக்கு பகிர வேண்டாம்.