பிஎஃப் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் சம்பளத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகைக்கு வட்டியில் லாபம் கிடைக்கிறது. இந்த பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நம் நினைத்த நேரம் எடுத்து விட முடியாது. அதற்கும் சில விதிமுறைகள் இருக்கிறது. இரண்டு சூழ்நிலைகளில் மட்டுமே பணத்தை எடுக்க முடியும். அதாவது தொழிலாளர் தன்னுடைய வேலை இழந்து இரண்டு மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தால் எடுக்கலாம். மற்றொன்று ஓய்வுக்கு பிறகு எடுக்கலாம். ஆனால் விரும்பினால் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது குறிப்பிட்டு அளவு பணத்தை பிஎஃப் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

இதற்கும் சில நிபந்தனைகள் உள்ளது. அதாவது சந்தாதாரரின் சகோதரி, சகோதரர் மகள் அல்லது குடும்ப உறுப்பினர் யாராலும் திருமணம் செய்து கொண்டால் அதற்கு பிஎஃப் பணத்தை எடுக்கலாம். அல்லது சொந்த கல்விச் செலவு குழந்தைகளுடைய கல்விக்காக ஓரளவு பணத்தை எடுக்கலாம். இதற்கு உங்களுடைய சேவை ஏழு வருடங்கள் இருக்க வேண்டும். ஏழு வருட சேவைக்கு பிறகு 50 சதவீதம் வரை பணத்தை எடுக்கலாம். அதுமட்டுமின்றி சிகிச்சை காலத்திலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.