
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் ஆதாரிலுள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஆதாரை அப்டேட் செய்யும் இடம் அருகில் எங்கு உள்ளது என UIDAI இணையதளம் மூலமாக கண்டுபிடிக்க வசதி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதற்கு முதலில் https://myaadhar.uidai.gov.in/என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று, Locate Enrolment centre என்பதை அழுத்தியதும் திறக்கும் பக்கத்தில் இடது புறம் மேலே Search by PIN Code என்பது இருக்கும். அதில் உங்களின் ஊரின் பின் கோட்டை பதிவிட்டதும் அந்த இடங்கள் திரையில் வரிசையாக வரும்.