இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் கிரைம் தாக்குதல்கள் என்பது அதிகரித்து வருவதால் நாம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதன்படி தனிப்பட்ட தகவல்கள் திருடப்படாமல் இருக்க இதையெல்லாம் கவனிக்க தவறாதீர்கள்.

பொது இடங்களில் உள்ள இலவச வைபை இணைப்புகள் பாதுகாப்பற்றவை என்பதால் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது அவற்றை பயன்படுத்த வேண்டாம்.

ஆன்லைன் கணக்குகளுக்கு எளிதில் யூகிக்க முடியாத வலுவான கடவுச்சொல்லை பயன்படுத்தவும்.

பாதுகாப்பான இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தவும்.

இணையதளத்தின் URL தொடக்கத்தில் https://என்று இருப்பதை உறுதி செய்யவும். இதில் உள்ள s என்பதற்கு secured என்று பொருள்.