
நிலாவைக்காட்டி சோறு ஊட்டிய காலம் சென்று மொபைல் போன் காட்டி சோறு ஊட்டும் காலம் வந்துவிட்டது. தங்களுடைய குழந்தைகளை சேட்டை செய்யாமல் பார்த்துக் கொள்ள பெற்றோர்கள் தற்போது கையில் எடுத்திருக்கும் நவீன யுக்தி மொபைல் போன். குழந்தைகள் அழுதாலோ அடம் பிடித்தாலோ உடனே மொபைலை கையில் கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தி விடுவார்கள். அது பின்னாளில் அவர்களுக்கு பழக்கம் ஆகி எப்போதும் மொபைல் போன் கேட்டு அடம் பிடிக்கும் சூழ்நிலைக்கு சென்று விடுவார்கள். அந்த மொபைல் போனை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதே பெற்றோர்கள் தான்.
அதே பெற்றோர்களால் அதை சரி செய்யவும் முடியும் என்பதை விளக்கும் விதமாக தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ஒரு குழந்தை மொபைல் போன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த குழந்தையுடைய பெற்றோர்கள் கையில் புத்தகத்தை எடுத்து வந்து அந்த குழந்தையின் முன்பே ஆர்வமாக படிக்கிறார்கள்.
அதை கண்டவுடன் அந்த புத்தகத்தில் ஏதோ இருப்பதாக உணர்ந்து குழந்தையும் ஆர்வத்துடன் ஒரு புத்தகத்தை எடுத்து வந்து படிக்கிறது. பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நல்லதையும், கெட்டதையும் பெரும்பாலும் பெற்றோர்களிடத்திலிருந்து தான் கற்றுக் கொள்கிறார்கள். நாம் அவர்கள் முன்பு எவ்வாறு நடந்து கொள்கிறோமோ அவ்வாறு தான் அந்த குழந்தையின் செயல்பாடுகளும் இருக்கும் குழந்தைகள் முன்பு நல்ல செயல்களை மட்டும் செய்வோம் என இது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram