இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக வங்கி அதிகாரிகள் போல வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு நடைபெறும் மோசடிகள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏமாற்றும் நிகழ்வுகளில் மட்டுமே வங்கி ஊழியர்கள் உங்களை அழைத்து தனிப்பட்ட விவரங்களை கேட்பார்கள் எனவும் தனது வாடிக்கையாளர்கள் வங்கி ஊழியர் அழைப்பு போல் வரும் எதையும் நம்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அழைக்கும் மோசடி மோசடி நபர்கள் வங்கி கணக்கு முடக்கம் போன்ற சிக்கல்கள் இருப்பதாக வாடிக்கையாளர்களை ஏமாற்ற முயல்கின்றனர் . எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஓடிபி, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு எண், ஆன்லைன் கணக்கு விவரங்களை வங்கி ஒருபோதும் கேட்காது. வங்கி தரப்பிலிருந்து ஒருபோதும் வேறு கணக்கிற்கு பணத்தை மாற்ற வேண்டும் என சொல்லப்படாது.

எனவே இது போன்ற போலி அழைப்புகள் வந்தால் அதனை உடனடியாக துண்டிக்க வேண்டும் எனவும் உங்களது கணக்கு முடக்கப்பட்டுள்ளது வங்கி கணக்கில் ஆபத்துகளை சரி செய்ய விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என வரும் அழைப்புகளையும் வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இதுபோன்ற அழைப்புகளை நம்பி பணத்தை இழந்தால் 1930 என்ற ஹெல்ப்லைன் நம்பருக்கு அழைத்து உடனடியாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.