இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாக்கி விட்டது. அதனால் ஆதாரில் உள்ள விவரங்களை குறிப்பிட்ட இடைவேளையில் கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் ஆதார் அட்டை தொலைந்து விட்டால் அல்லது ஆதார் எண்ணை மறந்து விட்டால் பயனர்கள் மிகவும் சிரமமான நிலையை சந்திக்கின்றனர். இது போன்ற நிலையில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

அதற்கு முதலில் https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற இணையதள பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை மீட்டெடுப்பது என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட வேண்டும்.

அதன் பிறகு உங்களுடைய ஆதார் எண் விவரங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்டு விடும்.