ஆதார் கார்டை தொலைத்து விட்டு அதை திரும்ப பெறுவது குறித்து தெரியாமல் சிலர் இருப்பர். அவர்களுக்கான ஆலோசனை இது. ஆதார் எண், ஆதாருக்கு கொடுக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவை இருந்தால் நாமே இதற்கு தீர்வு காண முடியும். அதற்கு முதலில் https://uidai.gov.in/en/என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று இடது புறம் மேலே உள்ள MY Aadhar பகுதியை அழுத்த வேண்டும். அதன் பிறகு புதிதாக திறக்கும் பக்கத்தில் Retrieve EID/ Aadhar number என்பதை அழுத்த வேண்டும். பிறகு திறக்கும் பக்கத்தில் மொபைல் ஏன் மற்றும் கேப்சாவை உள்ளிட்டு மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி பதிவிட வேண்டும்.

அதை பதிவிட்டதும் மொபைல் எண்ணுக்கு வரும் ஆதார் மற்றும் என்ட்ரோல் எண் குறித்துக் கொண்டு பிறகு Download Aadhar பகுதிக்கு வந்து ஆதார் எண் மற்றும் கேப்சாவை பதிவிட வேண்டும். அப்படி பதிவிட்டது மொபைல் எண்ணுக்கு மீண்டும் ஓடிபி வரும். அதை உள்ளிட்டதும் ஆதார் பதிவிறக்கமாகும். தொலைந்த ஆதாரத்துக்கு பதில் புதிய அட்டைக்கு அருகில் உள்ள ஆதார் சேவை மற்றும் இ சேவை மையம் சென்று விண்ணப்பிக்கலாம். ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணுடன் சென்று விண்ணப்பம் பூர்த்தி செய்து பயோமெட்ரிக்சை பதிவிட்டு கட்டணம் செலுத்த வேண்டும். இது முடிந்ததும் உங்கள் வீட்டுக்கு தபாலில் ஆதார் அனுப்பப்படும். அதேபோல அந்த மையத்தில் பிளாஸ்டிக் அழகானது அதனை பெற்றும் பயன்படுத்தலாம்.