ஆதார் அட்டையில் மொபைல் எண் இணைக்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதிசெய்யும் புதிய வசதியை UIDAI வழங்கியுள்ளது. இதற்காக, https://myaadhaar.uidai.gov.in/verify-email-mobile/en என்ற இணையதளத்திற்கு சென்று ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். இதன் மூலம், ஆதாருடன் தொடர்புடைய மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும், அதைத் தவறாமல் பரிசோதிக்கவும் முடியும்.

மொபைல் எண்ணைச் சரிபார்க்கும் செயல்பாட்டின் போது கேப்ட்சா கோரப்படும்.  அதை நிரப்பிய பின்னர், ‘ஓகே’ கொடுத்தால், குறிப்பிட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி (OTP) வரும். அந்த ஓடிபியை கொண்டு உறுதிப்படுத்தி, மொபைல் எண் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம், எந்தவொரு பாதுகாப்பு சிக்கலும் இல்லாமல் தங்களின் ஆதாரில் இணைக்கப்பட்ட எண்ணைத் துல்லியமாக உறுதிப்படுத்தும் வசதி கிடைக்கிறது.