
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீச பாண்டியன் மற்றும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கனிமொழி ஆகியோரை ஆதரித்து நேற்று (ஏப்ரல் 11) நடந்த பொதுக்கூட்டதில் சீமான் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மகளிர் உரிமை தொகை வழங்க தகுதி பார்ப்பதற்கு நீ யார்? அதென்ன உங்கள் அப்பன் வீட்டு காசா?
எங்கள் வரிப் பணத்தில் உதவித்தொகை வழங்குவதற்கு எங்களிடமே எதற்கு தகுதி பார்க்க வேண்டும்? அரசு பேருந்தில் இலவசம், யார் வழங்கச் சொன்னது? பின் வந்து ஓசி என பேசுவது, தமிழனே ஓசியென கூறுபவர்களை பற்றி கொஞ்சம் யோசி நாம் தமிழர் தம்பிகளை கொஞ்சம் நேசி என்று கூறினார்.