தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அரசியல் தொடர்பாகவும் தன் மனதில் பட்ட கருத்துக்களை தைரியமாக சொல்லக்கூடியவர். அந்த வகையில் பிரகாஷ் ராஜ் பாஜகவை நேரடியாகவே விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது மும்மொழிக் கொள்கையை ஏற்க சொல்லும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில், உங்களுக்கு ஹிந்தி தெரியும். நீங்க ஹிந்தியில் பேசுறீங்க. எங்களையும் ஹிந்தியில் பேச சொல்லி கட்டாயப்படுத்துறீங்க. ஏன்னா உங்களுக்கு ஹிந்தி மட்டும் தான் தெரியும். இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது. கெட் அவுட் மோடி என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவுக்கு தற்போது பாஜகவினர் கண்டனம் தெரிவித்து பதிலடி கொடுத்து வருகிறார்கள்.