விழுப்புரத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் ஒரு கருணா தான். அவர் கருணாநிதி. இன்றைக்கு நான் மட்டும் போராடும்போது என்னை கருணா என விமர்சிப்பது ஏன்? ஈழத்திற்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் செல்லாமல் தடுத்து நிறுத்தியவர் கருணாநிதி தான். இது அறிவுமதி மற்றும் கொளத்தூர் மணி உள்ளிட்டோருக்கு நன்றாகவே தெரியும் என கூறிய சீமான் ஈரோடு தேர்தல் பற்றி பேசும் போது, களம் எங்களுக்கானது, நான் ஒருவன் தான் போட்டியிடுகின்றேன்.

ஆனால் அமைச்சர்கள் பலர் களமிறங்கியும் கூட்டணி கட்சிகள் இருந்தும் வாக்குக்கு காசு கொடுப்பது ஏன்? இன்று பெரியார் பெரியார் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் பெரியாரை பற்றி பேசி வாக்கு கேட்க வேண்டியதுதானே. பெரியார் தாலி அடிமை சின்னம் என்றும் அதனை அறுத்து எறிய வேண்டும் எனவும் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிடுவது காட்டுமிராண்டித்தனம் எனவும் பேசியுள்ளார். அது மட்டுமல்லாமல் பெண்கள் கருப்பையை அறுத்து எறிய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மது குடிப்பதை தடுப்பது மனைவியுடன் உறவு வைக்கக் கூடாது என்று கூறுவதை போன்றது என பெரியார் பேசியதை கூறி நீங்கள் இன்னைக்கு வாக்கு கேட்க வேண்டியதுதானே என திமுகவை சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.