இந்தியாவில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் கேஒய்சி செயல்முறையை முடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை செய்யாவிட்டால் ரேஷன் கார்டில் இருந்து குறிப்பிட்ட பெயர்கள் நீக்கம் செய்யப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் ரேஷன் கார்டில் கேஒய்சி செயல்முறை நடந்து கொண்டிருக்கும் நிலையில் கேஒய்சி இல்லாமல் ரேஷன் கார்டுகள் இருக்கக் கூடாது எனவும் இதற்காக வார்டு வாரியாக முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஒய்சி என்பது ரேஷன் கார்டில் உள்ள குடும்ப நபர்கள் ஒவ்வொருவரின் ஆதார் அட்டையுடன் அதனை சரிபார்க்கும் பணியாகும். இதன் மூலமாக உயிரிழந்தவர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்படும் எனவும் வெளியூர்களில் பணி அல்லது கல்வி நிமித்தமாக சென்றுள்ள அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வந்த பிறகு கேஒய்சி பணிகளை முடிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.