இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் அட்டை புதுப்பிக்கும் போது போலி மின்னஞ்சல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் புதுப்பிக்கும் போது உங்களின் ஆவணங்களை பகிருமாறு ஏதாவது whatsapp அல்லது இமெயில்கள் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆதார் பிரச்சினைகளை தீர்க்க அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தி ஒன்று வைரலாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆதார் கார்டில் மொபைல் எண் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்துக்கும் அருகில் உள்ள இ சேவை மையம், தபால் அலுவலகம் மற்றும் வங்கிகளை மட்டுமே நாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.