
இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஒன்றாம் தேதி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. சுமார் 25 நாட்களுக்கு பிறகு இஸ்ரேல் ஈரானின் ராணுவ தளங்களை குறிவைத்து போர் விமானங்கள் மற்றும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவ தளபதி ஹசி ஹல்லேவி கூறியதாவது, ஈரான் இஸ்ரேல் மீது மற்றொரு ஏவுகணை தாக்குதலை நடத்தினால் அவர்களை மிகக் கடுமையாக தாக்குவோம். அந்த தவறை செய்யக்கூடாது.
அப்படி செய்தால் கடந்த முறை குறி வைக்கப்படாத இடங்களையும் குறி வைப்போம். இந்த நிலையில் ஈரானை எவ்வாறு வெற்றி அடைவது, நாங்கள் பயன்படுத்தாத திறன்களை கூட எப்படி பயன்படுத்துவது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஈரானின் சில இலக்குகள் எங்கள் பார்வையில் இருக்கிறது. இந்த நிகழ்வு முடிவடையவில்லை. நாங்கள் இன்னும் அதன் நடுவில் இருக்கிறோம் என கூறினார். அதன் மூலம் ஈரான் அணுநிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.