
அதிக அளவில் இ-சிகரெட் பிடித்ததால் இளம் பெண்ணின் நுரையீரலில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த கைலா பிளைத் என்ற இளம்பெண் ஒருவர் ஒரு வாரத்திற்கு சராசரியாக 400 இ சிகரெட்டுகளை புகைத்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம் பெண் தனது தோழியின் வீட்டில் இருந்தபோது கடந்த 11-ஆம் தேதி திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அவரை மீட்டு பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு இளம்பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அளவுக்கு அதிகமாக உள்ள சிகரெட் புகைத்ததால் நுரையீரலில் ஓட்டை விழுந்ததாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பல்மோனரி பிலப் என்ற நுரையீரல் ஓட்டை விரிவடையாமல் இருப்பதற்காக 5 மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்து நுரையீரலின் ஒரு பகுதியை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். இதனால் அந்த பெண் உயிர் பிழைத்தார் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.