இஸ்ரேலின் மீது கடந்த ஏழாம் தேதி பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஐந்தாயிரம் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே 14 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. இந்தப் போர் இரண்டு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த போர் காரணமாக காசாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதி பேர் அதாவது 10 லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சொந்த மண்ணிலேயே அகதிகளைப் போன்று முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதோடு அவர்களுக்கு அங்கு போதிய அளவு குடிநீர் உணவு கிடைக்காமல் துயரப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது.