இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த நான்கு மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இஸ்ரேலை எதிர்த்து லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் அடிக்கடி தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் லெபனான் நாட்டின் சிடோன் நகரில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. கார் ஒன்றை இலக்காக வைத்து நடந்த இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாகவும் இருவர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.