பொதுவாக ஐஸ்கிரீம் என்றாலே எல்லோருக்குமே பிடித்த ஒன்று. இந்த நிலையில் ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக கேமரா முன் வந்து நின்று இஷ்டத்திற்கு டான்ஸ் ஆடினால் ஐஸ் கிரீம் இலவசம் என்று பிரபல கடை ஒன்று சலுகையை அறிவித்து வருகிறது. வருடத்தில்  ஒரே ஒரு நாள் மட்டும் இந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு அந்த ஐஸ்கிரீம் கடை வழங்கி வருகிறது. இந்த ஐஸ்கிரீம் கடை பெங்களூருவில் உள்ளது. ஹார்னர் ஹவுஸ் என்ற இந்த ஐஸ்கிரீம் கடையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை தேசிய ஐஸ்கிரீம் தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த அதிரடி சலுகையை  ஐஸ்கிரீம் கடை வழங்கியுள்ளது.

வாடிக்கையாளர்கள் நடனம் ஆடினால் போதும். ஆனால் இதில் ஒரு கண்டிஷன் என்னவென்றால் சலுகை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் கடையில் உள்ள சிசிடிவி கேமரா முன்பாக அவர்களுடைய ஸ்டைலுக்கு என்ன வேண்டுமானாலும் ஆடலாம். இதனை அடுத்து பலரும் தங்களுடைய ஸ்டைலுக்கு ஏற்றார் போல அழகழகாக ஆடி ஐஸ்கிரீம்களை அள்ளி சென்றுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது..

 

View this post on Instagram

 

A post shared by Corner House Ice Creams (@cornerhouseicecreams)