
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் ராம்நாத் டாங்கி. செருப்பு வியாபாரியான இவருடைய வீட்டிலிருந்து ரூ.40 கோடி ரொக்கம் மற்றும் 60 கோடி தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 3 காலணி வியாபாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஐடி சோதனை நடத்தியது.
இதில் அவரது வீட்டில் படுக்கைகள், அலமாரிகள் மற்றும் பைகளில் ரூ.500 நோட்டுக் கட்டுகள் சிக்கியது. படுக்கையறை முழுவதும் ரூ.500 கட்டுகளால் நிரம்பி இருக்கும் காட்சியை பார்த்து அதிகாரிகள் வியந்தனர்.