
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஜாக்குலின் என்ற 34 வயது பெண் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு 11 மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். இவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதன் காரணமாக இவருக்கு 30 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இவர் அந்த பள்ளியில் சிறந்த ஆசிரியருக்கான விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.