வன்கொடுமை செய்திகளை சாதாரணமாக கடந்து செல்பவர்களை பார்த்தால் பயமாக இருப்பதாக பிரபல தொலைக்காட்சி பிரபலம் பாவ்னா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பெண்களை மதிக்கும் விதத்தில் ஆண்களை வளர்க்க வேண்டும். சமூகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்கு பெற்றோர்கள் தான் கற்றுத் தர வேண்டும். பெண்கள் மீதான தவறான பார்வையை ஆண்கள் மாற்றி அமைக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.