
தமிழக சட்டசபையில் நேற்று 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றினார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. இதில் தகுதி உடைய பெண்களுக்கு தான் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகளும், வரவேற்பும் இருந்து வருகிறது.
இந்நிலையில் ரேஷன் அட்டை இருக்கிறது என்பதற்காக அனைவருக்கும் மாதம் 1000 உரிமைத்தொகை வழங்க முடியாது என்று அமைச்சர் எவ. வேலு பேசியுள்ளார். தேர்தல் வாக்குறுதியில், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 என அறிவித்துவிட்டு, தற்போது தகுதியானோருக்கு பிரிப்பது ஏன் என பேரவையில் வானதி கேட்டார். பதிலளித்த வேலு, இங்கு MLAக்களுக்கு மாதம் 1.50L சம்பளம். நமக்கும்தான் ரேஷன் அட்டை உள்ளது, அதற்கு உரிமைத்தொகை வழங்கலாமா என்றார்.