இந்தியா மாஸ்டர்ஸ் அணியின் தலைவர் சச்சின் டெண்டுல்கர், IML 2025 இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக தனது பிரபலமான அப்பர்கட் ஷாட்டை விளாசி ரசிகர்களை 2003 உலகக் கோப்பை நினைவுகளுக்கு அழைத்துச் சென்றார். அவரது 25 ரன்கள் ஆட்டத்தின் போது, 18 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார். குறிப்பாக, அப்பர்கட் ஷாட்டில் பந்து 4 ரன்களுக்கு செல்ல, இது 2003 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அவரின் மறக்கமுடியாத வகையிலான  ஷாட்டை நினைவுபடுத்தியது .

தற்போது இணையத்தில் இவருடைய இந்த குறிப்பிட்ட வீடியோ தீவிரமாக வைரலாகி வருகிறது.  மேலும் சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம் பார்க்கும் போது பல ஆண்டுகள் பின்னோக்கிய, அந்த பழைய நினைவுகளுக்கு இழுத்து செல்கிறது என்று ரசிகர்கள் பல்வேறு மெய்சிலிர்க்கும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்..

“>

 

ML 2025 கோப்பையை வென்ற இந்தியா மாஸ்டர்ஸ்!

வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் முதலில் ஆடியதில் 148/7 என்ற ஸ்கோரை பதிவு செய்தது. இந்தியா மாஸ்டர்ஸ் சார்பில் வினய் குமார் 3 விக்கெட்டுகள், ஷாபாஸ் நதீம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 149 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி இந்தியா மாஸ்டர்ஸ் அம்பட்டி ராயுடு (74 off 50) மற்றும் சச்சின் (25 off 18) இணைந்த 67 ரன்கள் கூட்டணியுடன் அதிரடியாக தொடங்கியது. யுவராஜ் சிங், ஸ்டுவார்ட் பின்னி, குர்கீரத் சிங் ஆகியோர் சிறிய பங்களிப்புகளை அளிக்க, இந்தியா மாஸ்டர்ஸ் 17.1 ஓவரில் 6 விக்கெட் வெற்றி பெற்று IML 2025 கோப்பையை கைப்பற்றியது.