அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலம் மெடிசன் நகரில், 2 மாதம் கூட அடையாத தங்களுடைய குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தந்தை மற்றும் தாயார் கைது செய்யப்பட்ட சம்பவம் முழு நாட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ஸ்கைலர் கிளாசன் (வயது 22) மற்றும் மெடிசன் பிஷப் (வயது 21) ஆகியோராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த தம்பதியினர் தங்களது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கத்துடன் பிறப்பதற்கும் முன்னரே திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது பாலியல் பலாத்காரம் செய்வதற்காகத்தான் அவர்கள் குழந்தையையே பெற்றெடுத்துள்ளனர். தந்தையான கிளாசனின் கைப்பேசியில் குழந்தை சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில், தனது இரண்டு மாத குழந்தையை தானே வன்கொடுமை செய்து அதைப் பதிவு செய்துள்ளோம் எனக் கிளாசன் ஒப்புக்கொண்டதாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளாசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி நெவாடாவில் கைது செய்யப்பட்டு விஸ்கான்சின் மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டார். அவரது துணை மெடிசன் பிஷப், ஏப்ரல் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவர்களுக்கெதிராகக் குழந்தை பாலியல் வன்கொடுமை, தடை செய்யப்பட்ட புகைப்படங்கள் வைத்திருத்தல், அப்பாவியாகப் பிறந்த குழந்தையை ‘விற்பனை செய்யும்’ திட்டம் என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பிஷப்பின் முதற்கட்ட விசாரணை ஏப்ரல் 30ஆம் தேதிக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது டேன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குழந்தை பாதுகாப்பு சட்டங்களை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கைகளை விடுத்து வருகிறார்கள்.