
தமிழ் சினிமாவின் பாடகர், இசை அமைப்பாளர் மற்றும் நாடக எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பாவலர் வரதராஜன். இவர் இளையராஜாவின் உடன் பிறந்த அண்ணன் ஆவார். இளையராஜாவின் ஆரம்ப கால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய இவர் கடந்த 1973 ஆம் ஆண்டு காலமானார். இவரின் மகன் பாவலர் சிவன் இளையராஜாவின் இசைக் குழுவில் பயணித்து வந்தார். புதுச்சேரியில் வசித்து வந்த இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று இவர் காலமானார். இவருக்கு வயது 60. இவர் சில படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவரின் மறைவுக்கு தமிழ் சினிமா திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது இளையராஜாவின் ஒட்டுமொத்த குடும்பமும் கண்ணீரில் மூழ்கியுள்ளது.