
கர்நாடக மாநிலத்தில் உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மதசார்பற்ற ஜனாத தளம் கட்சியை சேர்ந்த ஆண் தொண்டர் ஒருவர், தன்னை ஜேடிஎஸ் எம்எல்ஏ சுராஜ் ரேவண்ணா, இயற்கைக்கு மாறாக பலாத்காரம் செய்ததாக முதலமைச்சர், உள்துறை அமைச்சர், டிஜிபி மற்றும் ஹசானா மாவட்ட எஸ்பி ஆகியோரிடம் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.
வேலை கேட்டுச் சென்ற தன்னை இயற்கைக்கு மாறாக பலாத்காரம் செய்ததாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட இளைஞர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவருடைய உடலில் காயங்கள் காணப்பட்டதாகவும் எஸ் பி முகமது தெரிவித்துள்ளார். மேலும் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எஸ்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் தான் இந்த சூரஜ் ரேவண்ணா என்பதும் குறிப்பிடத்தக்கது.